மாற்றுத்திறனாளிகளுக்கான ஆடை பாடத்திட்டத்தை சரிபார்க்கும் துறைசார் உறுப்பினர்கள்

Share

Share

Share

Share

இலங்கையின் ஆடைத் தொழில் துறை, தொழிற்பயிற்சி நிறுவனங்கள், சமூக சேவைகள் திணைக்களம், தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு, EFC இன் மாற்றுத்திறனாளி வள மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிலையங்களைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்கள் அண்மையில் கொழும்பில் உள்ள NH Collection Colombo இல் மாற்றுத்திறனாளிகளுக்களை (PwDs) உள்ளடக்கிய ஆடை உற்பத்தி பாடத்திட்டத்தை அங்கீகரிக்கும் நோக்கில் ஒரு தேசியப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது.

“உள்ளடக்கிய நூலிழைகள்: தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஆடை உற்பத்தி பாடத்திட்டத்தை அங்கீகரித்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறை, அனைவரையும் உள்ளடக்கிய திறன் மேம்பாடு மற்றும் அனைவருக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆதரிக்கும் ஒரு முன்முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. திருத்தப்பட்ட பாடத்திட்டம் – தொழில்துறை தையல் இயந்திர ஆப்ரேட்டர் (ISMO) பாடநெறியை மையமாகக் கொண்டது – மாற்றுத்திறனாளிகளுக்கு இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதி துறைகளில் ஒன்றில் வேலைவாய்ப்பைப் பெற உதவும் வகையில் அணுகக்கூடிய, தொழில்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்வு, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்னவின் வரவேற்புரையுடன் இந்த பயிற்சிப் பட்டறை ஆரம்பமானது. அவர், உள்ளடக்கிய பாடத்திட்ட வடிவமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “திறன் பயிற்சி என்பது வாய்ப்புகளுக்கான ஒரு பாலம். மாற்றுத்திறனாளிகளுக்கு, தொழில்துறைக்கு ஏற்ற படிப்புகளுக்கான அணுகல், வாழ்க்கையை மாற்றி, நிலையான வாழ்வாதாரத்திற்கான கதவுகளைத் திறக்கும்,” என்று அவர் கூறினார்.

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களளின் மன்றத்தின் (JAAF) சார்பில் கலந்துகொண்ட செயற்குழு உறுப்பினர் இந்திக்க லியனஹேவகே, நோக்கத்துடன் செயல்படுவதற்கான துறையின் பொறுப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் ஆடைத் தொழில் உலக அளவில் போட்டித்தன்மையுடன் நிலைத்திருக்க வேண்டுமானால், யாரும் பின்தங்கவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அணுகல்தன்மையையும் சந்தை சார்ந்த திறன்களையும் இணைக்கும் ஒரு பாடத்திட்டம் எதிர்காலத்திற்குத் தயாரான பணியாளர்களை உருவாக்குவதற்கு அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார். “ஏறக்குறைய ஒரு மில்லியன் இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொடும் ஒரு தொழில்துறையாக, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நாங்கள் நம்புகிறோம்.

இந்த முன்முயற்சி, வாய்ப்பு இடைவெளிகளைக் குறைப்பதிலும், மாற்றுத்திறனாளிகள் செழித்து வளரத் தேவையான கருவிகளையும் பயிற்சிகளையும் பெறுவதை உறுதி செய்வதிலும் ஒரு சக்திவாய்ந்த படியைக் குறிக்கிறது. உள்ளடக்கம் என்பது ஒரு லட்சியமாக இல்லாமல், ஒரு தரநிலையாக இருக்கும் ஒரு எதிர்காலத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என அவர் மேலும் கூறினார்.

“ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் –...
அமெரிக்காவின் புதிய தீர்வை வரி அறிவிப்பு...
Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...