விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய பங்காளர்களைக் கௌரவித்தது Samsung Sri Lanka

Share

Share

Share

Share

இலங்கை முழுவதும் உள்ள தனது சில்லறை விற்பனை பங்காளர்களின் திறமையைக் கௌரவிக்கும் வகையிலும், நீண்டகால வணிக உறவைக் கொண்டாடும் வகையிலும் ‘சில்லறை விற்பனையாளர்கள் மாநாடு 2026’ (Retailer Summit 2026) நிகழ்வை Samsung ஸ்ரீலங்கா நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது. ‘ஜோன் கீல்ஸ் ஆபீஸ் ஓட்டோமேஷன்’ (John Keells Office Automation – JKOA) மற்றும் ‘சாஃப்ட்லொஜிக் மொபைல் டிஸ்ட்ரிபியூஷன்’ (Softlogic Mobile Distribution – SMD) ஆகிய முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் Samsung வர்த்தக நாமத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய விற்பனையாளர்களைப் பாராட்டும் வகையில் இந்த இரண்டு நாள் மாநாடு அமைந்தது. யாழ்ப்பாணம் முதல் மாத்தறை வரை நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த வணிகப் பங்காளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 460-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இலங்கை சந்தையில் Samsung நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து உறுதிசெய்யும் வலுவான கூட்டுறவை மீண்டும் வலியுறுத்தும் தளமாக இம்மாநாடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக, நாடளாவிய ரீதியில் மிகச்சிறந்த விற்பனைத் திறனை வெளிப்படுத்திய 5 விற்பனைப் பங்காளர்களுக்கு ‘தேசிய விநியோகஸ்தர் சிறப்பு விருதுகள்’ (National Dealer Excellence Awards) வழங்கி கௌரவிக்கப்பட்டன. குறிப்பாக, விருது பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளுடன், குடும்பத்தினருடன் ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதியில் தங்குகின்ற சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.

இதன்படி, பைசோன் மொபைல் (தனியார்) நிறுவனம், கொழும்பு (தேசிய ரீதியில் முதலிடம்), தி ஸ்மார்ட்ஃபோன் ஷாப் (தனியார்) நிறுவனம், கொழும்பு (தேசிய ரீதியில் இராண்டாமிடம்), செல்ட்ரோனிக்ஸ் (தனியார்) நிறுவனம், கொழும்பு மெட்ரோ (தேசிய ரீதியில் நான்காமிடம்), திலகவர்தன செல்லுலர், கம்பஹா (தேசிய ரீதியில் ஐந்தாமிடம்) ஆகிய 5 நிறுவனங்கள் தேசிய விநியோகஸ்தர் சிறப்பு விருதுகளை வென்றன.

தேசிய விருதுகளுக்கு மேலதிமாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் Samsung தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கொண்டு சேர்த்த சிறந்த பிராந்திய விற்பனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் Samsung நிர்வாகத்தினரின் முதன்மை உரைகள், கலை நிகழ்ச்சிகள், Samsung இன் Knox பாதுகாப்பு அம்சம் மற்றும் எளிய தவணைக்கட்டண முறைகள் குறித்த விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. இந்த மாநாடு வெறும் விருது வழங்கும் விழாவாக மட்டுமின்றி, வணிக உறவுகளை வலுப்படுத்தவும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் சிறந்ததொரு தளமாக அமைந்தது.

இந்நிகழ்வைத் ஆரம்பித்து வைத்துப் பேசிய Samsung ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சங்ஹ்வா சோங், “சந்தைச் சவால்கள் நிறைந்த காலங்களிலும் இலங்கையின் சில்லறை விற்பனையாளர்கள் Samsung உடன் உறுதுணையாக நின்றுள்ளனர். இந்நாட்டில் Samsung இன் வெற்றிக்கு இந்த விற்பனைப் பங்காளர்களே முக்கியக் காரணம். Galaxy AI மற்றும் இணைப்புச் சாதனங்களின் புதிய சகாப்தத்திற்குள் நாம் காலடி எடுத்து வைக்கும் வேளையில், எமது பங்காளர்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து முதலீடு செய்வோம். ஏனெனில் அவர்களின் வளர்ச்சியில்தான் Samsung இன் வளர்ச்சியும் அடங்கியுள்ளது.” என்றார்.

இந்த நிலையில், Samsung ஸ்ரீலங்கா நிறுவனத்தின் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் (MX) பிரிவின் தலைவர் நுவன் உக்வத்த பேசுகையில், “நாங்கள் சந்தை மாற்றத்திற்காகக் காத்திருக்காமல், அந்த மாற்றத்தை முன்னெடுத்துச் சென்றோம். எமது மதிப்புமிக்க பங்காளர்களுடன் இணைந்து, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்முதல் செய்யும் முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் அதிகரித்து வரும் விலைகளின் தாக்கத்தைக் குறைத்து, வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் எமது வணிகத்தையும் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.

தேசிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்த பைசோன் மொபைல் (தனியார்) நிறுவனம் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கையில், ‘தேசிய ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருப்பது BUYZONE.LK நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். Samsung நிறுவனத்தின் தொடர்ச்சியான புதிய கண்டுபிடிப்புகளும், நம்பகமான சேவை அமைப்புமே நாங்கள் சந்தையில் முன்னிலை பெறக் காரணமாக அமைந்தன. இந்த அங்கீகாரம் மேலும் பல வெற்றிகளை நோக்கிப் பயணிக்க எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.”

இரண்டாம் இடத்தைப் பிடித்த தி ஸ்மார்ட்போன் ஷாப் (தனியார்) நிறுவனம் கூறுகையில், “தேசிய ரீதியில் இந்த விருதைப் பெறுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். Samsung மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள ஆழமான நம்பிக்கையையே இந்த வெற்றி பிரதிபலிக்கிறது. Samsung உடனான எங்களது கூட்டாண்மை வெறும் வணிகம் தாண்டியது. அது பரஸ்பர வளர்ச்சி மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.”

நான்காம் இடத்தைப் பிடித்த செல்ட்ரோனிக்ஸ் (தனியார்) நிறுவனம் குறிப்பிடுகையில், “Samsung நிறுவனத்தின் பல்வேறு வகையான தயாரிப்புகள், வாடிக்கையாளர்களின் தேவைகளை நாங்கள் உடனுக்குடன் பூர்த்தி செய்ய உதவுகின்றன. புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க Samsung வழங்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கு எங்களது நன்றிகள்.”

ஐந்தாம் இடத்தைப் பிடித்த கம்பஹாவின் திலகவர்தன செல்லுலார் தெரிவிக்கையில், “Samsung மற்றும் JKOA நிறுவனங்களுடன் நாங்கள் கட்டியெழுப்பியுள்ள வலுவான உறவிற்குக் கிடைத்த சான்றே இந்த விருதாகும். Samsung வர்த்தக நாமம் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே எங்களது வெற்றிக்கு முக்கியக் காரணம். இச்சேவையை மேலும் சிறப்பாகத் தொடர இது எங்களை ஊக்குவிக்கிறது.”

‘சில்லறை விற்பனையாளர்கள் மாநாடு 2026’ வெறும் விற்பனைச் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வாக மட்டுமன்றி, Samsung ஸ்ரீலங்கா, அதன் விநியோகப் பங்காளர்கள் மற்றும் நாடு தழுவிய விற்பனையாளர்கள் ஆகியோருக்கு இடையேயான கூட்டுறவை மேலும் உறுதிப்படுத்தும் தளமாகவும் அமைந்தது. புதிய கண்டுபிடிப்புகள், நம்பகமான சேவை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையைத் தொடர்ந்து வழங்கி, வரவிருக்கும் ஆண்டிலும் புதிய சாதனைகளைப் படைக்க Samsung தனது பங்காளர்களுடன் தயாராக உள்ளது.

BYD Mobile App හඳුන්වා දී...
නල්ලූර් කන්දස්වාමි කෝවිල් මංගල්‍යයේ ආගමික...
ITC Ratnadipa Welcomes Chef Prakhar...
28 Years of Fitness Evolution:...
5 ශ්‍රේණියේ දරුදැරියන් 6,500 කට...
ශ්‍රී ලංකාවේ සුළු, කුඩා හා...
KOKO සහ සෙලින්කෝ ඉන්ෂුවරන්ස් එක්ව...
Colombo Dockyard marks World Maritime...
ශ්‍රී ලංකාවේ සුළු, කුඩා හා...
KOKO සහ සෙලින්කෝ ඉන්ෂුවරන්ස් එක්ව...
Colombo Dockyard marks World Maritime...
KOKO மற்றும் Ceylinco கூட்டாண்மையில் இலங்கையின்...