காதலின் உன்னதத் தருணங்கள்: சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் ‘Nüwa’ விடுதியில் காதலர் தினக் கொண்டாட்டம்

Share

Share

Share

Share

காதலின் உண்மையான வசீகரத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த காதலர் தினத்தை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதன் ஆடம்பர விருந்தோம்பல் சேவையான ‘Nüwa’ விடுதியில் நடைபெறவுள்ள இந்த விசேட காதலர் தினக் கொண்டாட்டம், ஜோடிகளுக்கு இடையே அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை வழங்கும்.

வழக்கமான கொண்டாட்டங்களுக்கு அப்பால், சுவைமிகுந்த உணவுகள் மற்றும் பானங்களுடன் ஒரு இனிய மாலைப் பொழுதை இங்கே நீங்கள் அனுபவிக்கலாம்.

Nüwa விடுதியின் கிரிஸ்டல் லவுஞ்ச் பகுதியில் ஜோடிகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட கவர்ச்சிகரமான சூழலில், காதலர் தினத்தை உற்சாகமாக வரவேற்கலாம். இங்கு பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட இரவு உணவு பஃபே (Buffet) வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதோடு, கொழும்பு நகரின் இரவு நேர அழகை மேலிருந்து ரசித்தவாறே உங்கள் காதலைப் பரிமாறிக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த வசீகரம் நிறைந்த அனுபவத்திற்கு ஒரு நபருக்கு நிகர விலையாக ரூ. 10,000/- மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
தமது வாழ்வின் இனிமையான காதல் பந்தத்தை மேலும் வலுப்படுத்த விரும்பும் ஜோடிகளுக்கு, ‘The Vault at Nüwa’ ஒரு விசேட அனுபவத்தை வழங்குகிறது. உங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும், ரகசியத்தையும் பேணிக்கொண்டு, காதலை ஆழமாக உணரவும், உயர்தர உணவு மற்றும் பானங்களை ருசிக்கவும் இங்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காதலின் உண்மையான அர்த்தத்தை மதிக்கும் மற்றும் ரசனை மிக்க ஜோடிகளுக்காக மட்டுமே இந்தத் தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில், 10 ஜோடிகளுக்கு மட்டுமே இங்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ. 15,000/- என்ற விலையில் இதுவரையில் அனுபவித்திராத ஒரு உன்னத தருணத்தை நீங்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

பெப்ரவரி 14 ஆம் திகதி Nüwa விடுதியில் நடைபெறும் இந்தக் காதலர் தினக் கொண்டாட்டம், உங்கள் வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு வசந்த காலமாக அமையும் என்பதில் ஐயமில்லை. உங்கள் அன்புக்குரியவருடன் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் ஒரு அற்புதமான இரவைக் கழிக்க வருமாறு அனைத்து ஜோடிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

இதற்கிடையில், காதலர் தினக் கொண்டாட்டம் தம்பதிகளுக்கு மட்டுமானதல்ல. பெப்ரவரி 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை, Nüwa இன் கிரிஸ்டல் லவுஞ்சில் (25வது மாடி) நடைபெறும் கேலன்டைன்ஸ் இரவுணவு பஃபேயில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நட்பின் இனிமையைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அன்றைய தினம் மாலை 7.00 முதல் இரவு 10.00 மணி வரை, உங்கள் நண்பர்களுடன் ஒன்றிணைந்து, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உயர்தர உணவு வகைகள், நேரடி சமையல் அனுபவங்கள் மற்றும் ருசியான இனிப்பு வகைகளை அனுபவிக்கலாம். இலவச பானத்துடன் கூடிய இந்த அழகான அனுபவம், கடலின் அற்புதமான காட்சிகளுக்கிடையே, ஒரு நபருக்கு தலா ரூ. 8,500/- என்ற விலையில் வழங்கப்படுகிறது.

மேலதிக விபரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு +94 76 136 5759 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

கல்டெக்ஸ் அபிமானி STEM துறையில் அடுத்த...
டிஜிட்டல் யுகத்தில் ரமழான்: சமூக வலைத்தளங்கள்...
Samsung Sri Lanka Unveils New...
FitsAir நிறுவனத்துடன் இணைந்து அகமதாபாத் –...
835 BYD ATTO 1 வாகனங்களின்...
කොකා-කෝලා බෙවරේජස් ශ්‍රී ලංකා 2026...
BYD සහ DENZA වාහනවලට පමණක්...
Bairaha Farms Wins NCE Gold,...
කොකා-කෝලා බෙවරේජස් ශ්‍රී ලංකා 2026...
BYD සහ DENZA වාහනවලට පමණක්...
Bairaha Farms Wins NCE Gold,...
Capital Trust Properties’ Minoli Wickramasinghe...