H1 FY26இல் வரிக்கு முந்தைய இலாபமாக 204% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 477 மில்லியனை எட்டியுள்ள Mahindra Ideal Finance

Mahindra Ideal Finance Limited (MIFL), அதன் பல-பிராண்ட் வாகன நிதியளிப்புப் பிரிவின் துரித விரிவாக்கத்தால் உந்தப்பட்டு, 2025 செப்டம்பர் 30இல் முடிவடைந்த ஆறு மாதங்களில் (H1 FY26) வருமானம் மற்றும் இலாபத்தில் வலுவான வளர்ச்சியை வழங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்திற்கான மொத்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% அதிகரித்து 1.85 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அதே சமயம், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) ஆண்டுக்கு ஆண்டு 204% அதிகரித்து 477 மில்லியன் ரூபாவாக இருந்தது, மற்றும் […]

சமத்துவத்தை மதித்தல், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தனித்துவமான கொண்டாட்டம் நவம்பர் 21 ஆம் திகதி

சமூகத்தில் சமத்துவத்தை மதித்தல், மற்றும் பல்வேறு இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான திறன்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தேசிய கொண்டாட்ட நிகழ்வு, நவம்பர் 21 ஆம் திகதி கொழும்பைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் நடைபெற உள்ளது. GIZ 2023-2026 இலங்கை தொழில் பயிற்சித் திட்டம் (VTSL) உடன் இணைந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இந்த தனித்துவமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார பங்களிப்பை மேலும் மேம்படுத்துவதற்கான […]

குழந்தைப் பருவத்தை ஆர்வ உணர்வுடன் கொண்டாடிய Sunshine Holdings

நம்பிக்கைமிக்க எதிர்காலத்திற்கான அடித்தளம் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஆர்வத்தைப் புரிந்துகொள்வதில் உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில், ‘எதிர்காலத்தைக் கேளுங்கள். குழந்தைகளின் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சர்வதேச சிறுவர்கள் தினத்தை தனது ஊழியர்களின் குழந்தைகளுடன் கொண்டாடியது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ‘அப்பே கம’வில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குழுமத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மகிழ்ச்சியான புத்தாக்கங்கள் மற்றும் ஒற்றுமை நிறைந்த […]

City of Dreams Sri Lanka, NÜWA இல் “The Grand Pâtisserie Affair”ஐ அறிமுகப்படுத்துகிறது, இது ஒரு இனிமையான திருப்பத்துடன் ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டுவருகிறது

2025 நவம்பர் 10, கொழும்பு – கொழும்பு நகரத்தின் அழகும் வசதியும் நிறைந்த City of Dreams Sri Lanka, அதன் புதிய விருந்தோம்பல் அனுபவமான ” The Grand Pâtisserie Affair” அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. NÜWAவின் The Crystal Lounge The Crystal Loungeஇல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான அனுபவம், சுற்றுலாத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நவீனத்துவம் கலந்த விருந்தோம்பலின் ஒரு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. கடந்த நவம்பர் 8ம் திகதி, சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு விருந்தோம்பல் அனுபவம், […]

முதல் அரையாண்டில் வலுவான செயல்திறனை வழங்கும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட இலங்கை கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), இந்த ஆண்டின் வலுவான ஆரம்பத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 நிதியாண்டின் முதல் பாதியில் (1HFY26) அனைத்து துறைகளிலும் ஒரு ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்கியுள்ளது. சன்ஷைன் குழுமமானது, 1HFY26 இல் 32.3 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டை விட (YoY) 7.4% அதிகரிப்பாகும். இதற்கு முதன்மைக் காரணம், நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகளின் வலுவான ஒத்துழைப்புடன், சுகாதாரத் […]

எவல்யூஷன் ஒட்டோ, அதன் முதன்மையான பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை கொழும்பு 05 இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கிறது

எவல்யூஷன் ஒட்டோ நிறுவனம், ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் தனது பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை பிரமாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த காட்சியறையை, வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை ஆராய்ந்து வாங்கும் போது ஒரு பிரீமியம், தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியறை இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகன தொகுப்பைக் கொண்டுள்ளது, இதில் சாங்கனின் Avatr> SAIC மோட்டரின் IM மோட்டார்ஸ், Geely ஒட்டோ குழுமத்தின் Xpeng & Riddara […]

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கருவிகள் மூலம், பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துகிறது TikTok

TikTok, தனது பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பு திறனுக்கான ஆதரவை மேம்படுத்தும் நவீன அம்சங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளம், படைப்பாற்றல் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுவதற்கு நிரந்தரமாக பணியாற்றி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் உள்ளிட்ட பரந்த சமூகத்தை குறிவைத்து, மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, புதிய அம்சங்கள் மற்றும் […]

2025, 16வது தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஆன்லைன் பாதுகாப்பு மூலோபாய கூட்டாளியாக CERT உடன் இணையும் TikTok

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு இந்த ஆண்டு 16வது முறையாக நடைபெற உள்ளது, மேலும் TikTok நிறுவனம் SL CERT உடன் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அதன் மூலோபாய பங்காளியாக கைகோர்த்துள்ளது. இந்த உச்சி மாநாடு இந்த மாதம் (நவம்பர்) 12 ஆம் திகதி நடைபெற உள்ளது. இலங்கையில் சைபர் பாதுகாப்பு குறித்த முதன்மையான தேசிய நிகழ்வாகக் கருதப்படும் வருடாந்திர உச்சிமாநாடு, அரசு நிறுவனங்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், தொழில் நிபுணர்கள் […]

தொழில்நுட்பம் நிறைந்த காப்புறுதி சேவைகளுடன், இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது செயல்பாடுகளை ஆரம்பிக்கும் Policybazaar

இந்தியாவின் மிகப்பெரிய காப்புறுதித் தளமான Policybazaar.com, இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தனது காப்புறுதி சேவைகளைத் தொடங்கியதாக அண்மையில் அறிவித்தது. இதன் மூலம், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொழில்நுட்பத்துடன் கூடிய காப்புறுதி மாதிரியை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய காப்புறுதி தரகராக இது மாறுகிறது. டிஜிட்டல் மையமாகக் கொண்ட Policybazaarஇன் காப்புறுதி சேவைகள், ஒரு தசாப்தத்திற்கும் மேலான சேவை அனுபவம், தரவு பகுப்பாய்வு மற்றும் நடைமுறை அறிவின் மூலம், […]

இலங்கையின் உழைக்கும் தொழில்முனைவோருக்கான நிதியுதவி அணுகலை பலப்படுத்தும் Mahindra Ideal Finance

இலங்கை முழுவதும் உள்ள மக்கள் முச்சக்கர வண்டிகள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய ரக லொறிகளை வெறுமனே போக்குவரத்திற்காக மட்டும் நம்பியிருக்கவில்லை, வருமானத்திற்காகவும் நம்பியிருக்கின்றனர். அவர்கள் டெலிவரி ரைடர்கள், விநியோகஸ்தர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் ஆவர், இவர்களது அன்றாட உழைப்பு உள்ளூர் பொருளாதாரங்களை ஆதரித்து மேம்படுத்துகிறது. ஆயினும்கூட, நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் பங்களித்த போதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவது அவர்களுக்கு சவாலாகவே உள்ளது, மேலும் அவர்கள் முறையான […]