LANKATILES இலங்கையின் முதல் Solar Reflective COOL ROOFTOP TILE® ஐ அறிமுகப்படுத்துகிறது

Share

Share

Share

Share

கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலின் Winchester Hall நிகழ்வு மண்டபத்தில் ஜூலை 2 ஆம் தேதி நடைபெற்ற ஊடக அறிமுக விழாவில், இலங்கையில் முதல் முறையாக சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் COOL ROOFTOP TILE® ஐ லங்காடைல்ஸ் பிஎல்சி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. திறந்தவெளி மாடிக்கூரைகள், மாடித்தளங்கள் மற்றும் பால்கனிகளிலிருந்து உள்வீட்டு பகுதிகளுக்கு வெப்பம் பரவுவதால் உருவாகும் அதிகரித்து வரும் சவாலுக்கு நடைமுறை தீர்வாக, இந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு ஊடகவியலாளர்கள், தொழில்துறையுடன் தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் கட்டுமான தொழில்சார்ந்தவர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கை முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், திறந்தவெளி கூரை மேற்பரப்புகள் அசௌகரியத்தின் ஒரு முக்கிய மூலமாக மாறியுள்ளன. இது கட்டிடங்களுக்குள் வெப்பக் கடத்தலை அதிகரித்து, குளிரூட்டும் முறைகளில் தங்கியிருக்கும் நிலைமையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. விரிவான ஆராய்ச்சி மற்றும் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட COOL ROOFTOP TILE® சூரியக் கதிர்வீச்சின் கணிசமான பகுதியை கட்டிட அமைப்பிற்குள் உறிஞ்சப்படுவதற்கு முன்பே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குளிர்ச்சியான கூரை மேற்பரப்புகளையும், மிகவும் வசதியான உட்புறச் சூழல்களையும் தோற்றுவிக்க உதவுகிறது.

லங்காடைல்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரியந்த தல்வத்த அவர்கள் இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, “ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கையர்கள் தங்கள் வீடுகளைக் கட்டும் மற்றும் அனுபவிக்கும் விதத்தை மாற்றியமைக்கும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகளை லங்காடைல்ஸ் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்துள்ளது. அந்தப் பயணத்தில், இலங்கையின் முதலாவது COOL ROOFTOP TILE® இன் அறிமுகம் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், வீட்டின் உள்ளே நிலவும் வெப்பச் சூழல் குறித்த அக்கறை வீட்டு உரிமையாளர்களிடையே அதிகரித்து வருவதாலும், இந்தச் சவாலை அதன் தோற்றத்திலேயே எதிர்கொள்ளும் ஒரு தீர்வின் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். வசிப்பிடங்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இலங்கை குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையிலான தயாரிப்புகளை உருவாக்குவதில் எமது அர்ப்பணிப்பை இந்தக் கண்டுபிடிப்பு பிரதிபலிக்கிறது.”

வெட்டவெளியில் அமைந்த கொங்கிரீட் கூரைகள் பொதுவாகக் காணப்படும் இலங்கை கட்டுமானச் சூழலுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு, பல வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சவாலுக்குத் தீர்வாக அமைகிறது. கூரைகள் பகல் முழுவதும் அதிக அளவிலான வெப்பத்தை உறிஞ்சித் தக்கவைத்துக்கொண்டு, அந்த வெப்பத்தை மெதுவாகக் கீழே உள்ள அறைகளுக்குக் கடத்துகின்றன. COOL ROOFTOP TILE® இந்தச் செயல்முறையைக் குறைக்க உதவுவதுடன், பகல் மற்றும் இரவு முழுவதும் வீட்டின் உட்புற வெப்பநிலையைக் குறைவாகவும், வசதியான சூழலையும் பேணிப்பராமரிக்க உதவுகிறது.

இந்தியாவின் CEPT Advisory Foundation (CAF) நடத்திய சோதனைகள் மூலம் இத்தயாரிப்பின் செயல்திறன் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது 96 க்கும் அதிகமான சிறந்த சூரிய ஒளி பிரதிபலிப்பு குறியீட்டு (Solar Reflectance Index – SRI) மதிப்பை எட்டியுள்ளது. SRI என்பது மேற்பரப்பு சூரியக் கதிர்வீச்சை எவ்வளவு திறம்பட பிரதிபலிக்கிறது மற்றும் வெப்பத்தை வெளியேற்றுகிறது என்பதை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அளவீடாகும். அதிக SRI மதிப்பு என்பது நேரடி சூரிய ஒளியில் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருப்பதைக் குறிக்கிறது, இது இந்த டைல்ஸின் சிறப்பான சூரிய ஒளி பிரதிபலிப்புத் திறனை எடுத்துக்காட்டுகிறது.

லங்காடைல்ஸ் நிறுவனத்தின் குழும விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் நைமிஷ் பதிபந்தா அவர்கள் இந்தக் கண்டுபிடிப்பினால் நுகர்வோருக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து கருத்துக் கூறுகையில், “இன்றைய நுகர்வோர் தங்கள் வாழ்க்கை முறையை உண்மையாகவே மேம்படுத்தும் தீர்வுகளை விரும்புகிறார்கள். COOL ROOFTOP TILE® என்பது வசதி, புதுமை மற்றும் நடைமுறைத்தன்மை ஆகியவற்றின் ஒரு சிறந்த கலவையாகும். கூரையின் வெப்பம் அதிகரிப்பதைக் குறைப்பதன் மூலமும், மிகவும் வசதியான உட்புறச் சூழலை உருவாக்குவதன் மூலமும், லங்காடைல்ஸின் புகழ்பெற்ற தரம் மற்றும் சிறந்த வடிவமைப்பை அனுபவிக்கும் அதே வேளையில், அதிகரித்து வரும் வெப்பநிலையின் தாக்கங்களைச் சமாளிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு இது உதவுகிறது.”

இக்கண்டுபிடிப்பின் பின்னணியில் உள்ள விரிவான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை முன்னிலைப்படுத்திய உற்பத்திப் பிரிவின் நிர்வாகப் பணிப்பாளர் நந்தஜித் சோமரத்ன அவர்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் முதல் COOL ROOFTOP TILE® ஐ உருவாக்குவதற்கு விரிவான ஆராய்ச்சி, தயாரிப்பு பொறியியல் மற்றும் செயல்திறன் சரிபார்ப்பு ஆகியவை தேவைப்பட்டன. சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட 96 க்கும் அதிகமான Solar Reflectance Index மதிப்பை எட்டியிருப்பது, எங்கள் நிறுவனத்தின் உந்தசக்தியாகக் காணப்படும் புத்தாக்கம், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிறந்த உற்பத்தித் திறன் ஆகியவற்றிற்கு ஒரு சான்றாகும்.”

COOL ROOFTOP TILE® இன் அறிமுகமானது, கட்டிடப் புத்தாக்கத்தில் ஒரு முன்னோடியாக லங்காடைல்ஸின் ஸ்தானத்தை வலுப்படுத்துவதோடு, வெப்பமயமாகும் காலநிலையில் குளிர்ச்சியான, வசதியான மற்றும் நீடித்த வாழ்விடங்களை உருவாக்குவதற்கான ஒரு நடைமுறைத் தீர்வையும் வீட்டு உரிமையாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத் தொழில் வல்லுநர்களுக்கு வழங்குகிறது.

2026 ලංකා ප්‍රීමියර් ලීග් තරඟාවලිය...
Prime සමූහය LMD වෙතින් මෙරට...
FACETS Sri Lanka 2027: ஒரு...
Shantha Bandara reappointed SLCPI President...
500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை...
“Just a Content Creator?” Tesaarah...
City of Dreams Sri Lanka...
LANKATILES and the Geoffrey Bawa...
“Just a Content Creator?” Tesaarah...
City of Dreams Sri Lanka...
LANKATILES and the Geoffrey Bawa...
உலகளாவிய சைபர் பாதுகாப்புப் தரவரிசையில் Sophos...