ஜனசக்தி பைனான்ஸ், பெண்களின் புத்திசாதுரியமான நிதி வளர்ச்சிக்கு வலுவூட்டும் வகையில் “சக்தி” திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

Share

Share

Share

Share

JXG இன் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, பெண்களுக்கென பிரத்தியேக நிலையான வைப்புத் திட்டமான “சக்தி” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைவரையும் உள்ளீர்க்கும் நிதி மற்றும் எதிர்காலத்திற்கான சாதுரியமான சேமிப்பு என்பவற்றிற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

இன்றைய பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட “சக்தி”, பாரம்பரிய நிலையான வைப்புத் திட்டத்திலிருந்து வேறுபட்டது. இது பெண்களுக்கு அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பிப்பது முதல் வணிகத்தை முன்னேற்றுதல், தமக்கும் தங்கள் குடும்பத்தினருக்குமான நீண்டகால நிதிப் பாதுகாப்பைத் திட்டமிடல் வரையில் இத்திட்டம் ஆதரவளிக்கின்றது.

பெண்கள், தொழிற் படையில் அதிகளவு இணைந்துகொள்ளல், வணிகங்களை வழிநடத்துதல் மற்றும் நிதி தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளுதல் போன்ற முன்னேற்றகரமான மாற்றங்களின் விளைவாக, பொருத்தமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய முதலீட்டுத் தீர்வுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், நீண்ட கால நிதித் திட்டங்களில் பல பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. முறையான சேமிப்புடன் நீண்ட கால நிதித் திட்டமிடலை ஊக்குவிக்கும் பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் முதலீட்டு வாய்ப்பை வழங்குவதன் மூலம் இத் தேவையை “சக்தி” பூர்த்தி செய்கிறது.

இத் திட்டம், மேலதிக நன்மைகளுடன் போட்டித்தன்மை வாய்ந்த வருமானத்தையும் வழங்குவதால் பெண்கள் காலப்போக்கில் தொடர்ச்சியாக செல்வம் சேர்ப்பதை எளிதாக்குகிறது. ஜனசக்தி பைனான்ஸின் விரிவடைந்து வரும் கிளை வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் திறன்களின் ஆதரவுடன் “சக்தி” திட்டமானது முக்கிய நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள், சௌகரியமாகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்து தெரிவிக்கையில், “நிதித்துறை முழுவதும், பொருளாதாரத்தில் பெண்களின் மாறிவரும் பங்கைப் பிரதிபலிக்கும் தீர்வுகளை உருவாக்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. பணியிடங்களிலும் தொழில்முனைவிலும் பெண்களின் அதிகப்படியான பங்கேற்பானது மேலும் ஒருமுகப்படுத்தப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய நிதித் திட்டங்களை அவசியமாக்குகிறது. பெண்கள் முன்கூட்டியே திட்டமிடவும், காலப்போக்கில் செல்வத்தை உருவாக்கவும், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் நிதி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் வலுவான பங்களிப்பை வழங்குவதற்கும் ஆதரவளித்து இந்த மாற்றத்திற்கு உதவும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாகவே “சக்தி” விளங்குகிறது. அத்துடன் இது அனைவரும் உள்வாங்கப்படுவதை ஊக்குவிப்பதற்கும் கட்டமைக்கப்பட்ட முதலீட்டு வாய்ப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்குமான எங்களது பரந்த நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது.” என்றார்.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் வழிமுறைகளின் (Channels) தலைவர் சமிந்த ரத்நாயக்க, மேலும் கூறுகையில், “சக்தி” ஊடாக பெண்களுக்குப் பொருத்தமானதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்கும் ஒரு திட்டத்தை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இது மேலதிக நலன்களுடன், முதலீட்டைத் தொடங்குவதற்கான ஓர் எளிய மற்றும் பலனளிக்கும் வழியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வழக்கமான நிலையான வைப்புத்திட்டங்களை விட அர்த்தமுள்ளதாக அமைகிறது. எமது கிளை வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் தொடர்பு மையங்கள் ஊடாக பெண்கள் இச் சேவையை சௌகரியமாக அணுகலாம். இதன் மூலம் அவர்கள் வலுவான நிதி எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடுத்த படியை எடுத்து வைக்க நாங்கள் உறுதுணையாக உள்ளோம்.” என்றார்.

மேலும் இத் திட்டம், சலுகை அடிப்படையிலான வட்டி வீதங்களில் கடன்கள் மற்றும் லீசிங், முதலீட்டுத் திட்டங்கள் என்பவற்றுடன் தொழிற்பாட்டு மூலதன நிதி உள்ளிட்ட பரந்த அளவிலான நிதித் தீர்வுகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை வழங்கும். இதன் மூலம் பெண்களின் நிதி மற்றும் தொழில்முனைவுப் பயணங்களுக்கு மேலும் வலுவூட்டும்.

சேமிப்புத் திட்டம் என்பதைத் தாண்டி, “சக்தி” பெண்களைக் குறுகிய கால சேமிப்புப் பழக்கங்களிலிருந்து கட்டமைக்கப்பட்ட நீண்ட கால முதலீட்டிற்கு மாற உதவுகிறது. இது வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட புதுமைகளுக்கான ஜனசக்தி பைனான்ஸின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு நம்பகமான நிதிப் பங்காளராகத் தனது பங்கையும் உறுதிப்படுத்துகிறது.

“சக்தி” உடன் பெண்கள் நிதி ரீதியாக நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் வலுவான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் ஜனசக்தி பைனான்ஸ் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

ශ්‍රී ලංකාවේ සුඛෝපභෝගී වාහන ලීසිං...
සුවිශේෂී උත්සව සඳහා ගාල්ලේ හොඳම...
Behind the Sparkle: How a...
Janashakthi Life ශ්‍රී ලංකාවේ ප්‍රථම...
World Economic Magazine விருதுகள் 2026...
First Capital සමාගම 2026 World...
Huawei Unveils its Grid-Interactive AIDC...
உலகளாவிய வாகனப் புத்தாக்கத் தரவரிசையில் முதலிடம்...
First Capital සමාගම 2026 World...
Huawei Unveils its Grid-Interactive AIDC...
உலகளாவிய வாகனப் புத்தாக்கத் தரவரிசையில் முதலிடம்...
சிவனொளிபாத ஸ்தானத்தை சுத்தம் செய்யும் திட்டத்தை...