கண்டி நகரில் நவீன விருந்தோம்பல் சேவையின் ஓராண்டு நிறைவை உற்சாகமாகக் கொண்டாடும் KANDY MYST BY CINNAMON

Share

Share

Share

Share

கண்டி, இலங்கை – 12 பெப்ரவரி 2026: கண்டி நகரின் நவீன விருந்தோம்பல் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ள ‘கண்டி மிஸ்ட் பை சினமன்’ (Kandy Myst by Cinnamon), தனது முதலாம் ஆண்டு நிறைவை இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறது. கண்டி நகருக்கு புத்துணர்ச்சியையும், கலாசார விழுமியங்களையும், தனித்துவமான வாழ்க்கை முறை அனுபவங்களையும் வழங்கும் நோக்குடன், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி இந்த ஹோட்டல் தனது பயணத்தை ஆரம்பித்தது.

சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (Cinnamon Hotels & Resorts) மற்றும் இந்த்ரா ட்ரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Indra Traders (Pvt) Ltd) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான இந்த ஹோட்டல், சர்வதேச தரத்திலான விருந்தோம்பல் நிபுணத்துவத்தையும், உள்ளூர் கலாசார நுணுக்கங்களையும் மிகச்சிறப்பாக ஒன்றிணைத்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு நவீனமான, உற்சாகமான மற்றும் புதிய வாழ்க்கை முறை சார்ந்த சேவைகளை வழங்குவதில் ‘கண்டி மிஸ்ட்’ ஒரு முன்னணி இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி நகரில் அதிக எண்ணிக்கையிலான அறைகளைக் கொண்ட ஹோட்டலாகத் திகழும் ‘கண்டி மிஸ்ட் பை சினமன்’, 215 நவீன வசதிகள் கொண்ட அறைகளுடன் சுற்றுலா மற்றும் வணிக நோக்கில் வருகை தரும் பயணிகளுக்கு உன்னதமான சேவையை வழங்குகிறது. நகரின் பிரதான சுற்றுலாத் தலங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளமை இதன் சிறப்பம்சமாகும். விருந்தினர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு ஒரு துடிப்பான சமூக அனுபவத்தை வழங்கும் வகையில் இங்குள்ள உணவகங்கள் மற்றும் கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கூரைத் தளத்தில் அமைந்துள்ள ‘கொஸ்மோஸ் ஸ்கை பார்’ (Kosmos Sky Bar), கண்டி நகரின் முழுமையான அழகை (Panoramic view) ரசித்தவாறு பொழுதைக் கழிக்கவும், அங்குள்ள வெதுவெதுப்பான நீர் வசதி கொண்ட ‘இன்பினிட்டி’ நீச்சல் தடாகத்தில் (Heated infinity pool) திளைக்கவும் வாய்ப்பளிக்கிறது. உணவுப் பிரியர்களுக்காக ‘கிரெயின்ஸ் டைனிங்’ (Grains Dining) பஃபே உணவகத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச உணவு வகைகள் மிக நேர்த்தியாகப் பரிமாறப்படுகின்றன.

அதேவேளை, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்கேற்ற ஒரு நவீன கஃபே பாணியிலான சூழலை ‘டெர்ரா லவுஞ்ச்’ (Terra Lounge) வழங்குகிறது. இவ்வாறான நவீன வசதிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம் கண்டி நகரின் விருந்தோம்பல் துறையில் ‘கண்டி மிஸ்ட்’ ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது முதல் ஆண்டிலேயே பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை ‘கண்டி மிஸ்ட்’ எட்டியுள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் எதிர்கால நோக்குடைய அபிவிருத்தியில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், கண்டி நகரில் ‘Terra Lounge’ சான்றிதழைப் பெற்ற முதல் ஹோட்டல் என்ற கௌரவத்தை இது பெற்றுள்ளது. சர்வதேசத் தரம் மற்றும் கலாசார விழுமியங்களை ஒன்றிணைக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆல்பா பிளான்டி (Alpha Blondy) உள்ளிட்ட பல சர்வதேச ஆளுமைகளை இந்த ஹோட்டல் வரவேற்றுள்ளது. அத்துடன், 2025 மே மாதம் நடைபெற்ற நியூசிலாந்து 85 கிலோ கிராம் எடைப்பிரிவிற்கு உட்பட்ட ரக்பி அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கான உத்தியோகபூர்வ கிண்ணம் அறிமுக நிகழ்வு உட்பட, பல உயர்மட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் கண்டி நகரின் மிக முக்கியமான ஒரு அடையாளமாக ‘கண்டி மிஸ்ட்’ உருவெடுத்துள்ளது.

கடந்த ஓராண்டு காலப்பகுதியில், பல்வேறு பருவகால விசேட கொண்டாட்டங்கள் (Seasonal activations), பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் விசுவாசத் திட்டச் சலுகைகள் (Loyalty offers) ஊடாக ‘கண்டி மிஸ்ட்’ ஹோட்டல் தனது விருந்தினர்களையும், உள்ளூர் மக்களையும் வெற்றிகரமாக ஒன்றிணைத்துள்ளது. அத்துடன், உள்ளூர் வர்த்தகப் பங்காளர்களுடனான கூட்டிணைவு மற்றும் சமூக நலத்திட்டங்கள் ஊடாக கண்டி நகரின் சுற்றுலாப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், சமூக முன்னேற்றத்திலும் இந்த ஹோட்டல் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

தனது வெற்றிகரமான இரண்டாம் ஆண்டில் கால் பதிக்கும் ‘கண்டி மிஸ்ட் பை சினமன்’, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு தனது தனித்துவமான உணவகங்கள் மற்றும் நவீன வாழ்க்கை முறை சார்ந்த வசதிகளை அனுபவிக்க தொடர்ந்தும் அழைப்பு விடுக்கிறது. கண்டி நகரின் நவீன விருந்தோம்பல் துறை மற்றும் கலாசாரப் பின்புலத்தை வடிவமைப்பதில் தனது முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ள இந்த ஹோட்டல், எதிர்வரும் காலங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்குப் புத்துணர்ச்சியூட்டும் அனுபவங்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்:
தினாலி ருஹுனுஹேவா (முகாமையாளர்) – மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் (Sri Lanka Resorts) சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (Cinnamon Hotels & Resorts) மின்னஞ்சல்: [email protected]

HNB 2026 ජාත්‍යන්තර කාන්තා දිනයට...
Power World joins hands with...
Janashakthi Finance Wins Bronze Effie...
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:...
චීන සංස්කෘතියේ අභිමානය පෙරටු කොට...
T20 உலகக் கிண்ணத்தில் பிளாஸ்டிக் மீள்சுழற்சியை...
Ramadan in the Digital Age:...
தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக்...
T20 உலகக் கிண்ணத்தில் பிளாஸ்டிக் மீள்சுழற்சியை...
Ramadan in the Digital Age:...
தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக்...
Huawei Unveils Three Key Values...