சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ‘Wowurudu’ பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

Share

Share

Share

Share

வரவிருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, Samsung Sri Lanka நிறுவனம் தனது நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்களுக்கான ‘Wowurudu’ எனும் புதிய பிரச்சாரத்தை எதிர்வரும் 2026 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. சித்திரைப் புத்தாண்டின் பாரம்பரிய உற்சாகம் மற்றும் புதியதொரு தொடக்கத்தின் உந்துதலால் ஈர்க்கப்பட்டுள்ள இந்த ‘Wowurudu’ பிரச்சாரமானது, Samsung இன் நம்பிக்கைக்குரிய நவீன தொழில்நுட்பத் தயாரிப்புகள் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை மேலும் சிறப்பாக்குவதையும், குடும்பங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பாரம்பரியங்கள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகளை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘Wowurudu’ பிரச்சாரமானது, இலங்கை குடும்பங்களுக்கு அர்த்தமுள்ள புத்தாக்கங்களை வழங்குவதில் Samsung நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. தொலைக்காட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், குளிரூட்டிகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட முக்கிய நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்களை இந்தப் பிரச்சாரம் உள்ளடக்கியுள்ளது. இப் பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் தமது இல்லங்களை முழுமையான நம்பிக்கையுடன் புதிய பொலிவுடன் மெருகூட்டுவதற்கான சிறந்ததொரு வாய்ப்பை இது வழங்குகிறது.

இந்த சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, Samsung Sri Lanka நிறுவனம் இரண்டு புதிய ‘Double Door Inverter No Frost’ குளிர்சாதனப் பெட்டி மாதிரிகளையும், ஒரு ‘Twin Inverter’ குளிரூட்டி (Air Conditioner) மாதிரியையும் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. மின் சக்தி சேமிப்பு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நவீன ‘ஸ்மார்ட்’ தொழில்நுட்ப வசதிகளைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய தயாரிப்புகள், நவீன இலங்கை குடும்பங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

Samsung இன் அதிநவீன டிஜிட்டல் இன்வெர்ட்டர் (Digital Inverter) தொழில்நுட்பத்தைக் கொண்ட இப்புதிய குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்ச்சியின் தேவையைத் துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப இயங்குவதால், மின்சார நுகர்வைக் கணிசமாகக் குறைப்பதுடன் நீண்டகால நம்பகத்தன்மையையும் உறுதி செய்கின்றன. மேலும், இதில் உள்ள ‘நோ ஃப்ரோஸ்ட்’ (No Frost) தொழில்நுட்பமானது உட்புறத்தில் பனி உறைவதைத் தடுக்கின்றது. அதேவேளை, ‘ஆல் ரவுண்ட் கூலிங்’ (All Round Cooling) வசதியானது குளிர்சாதனப் பெட்டியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான தட்பவெப்ப நிலையை விநியோகிப்பதன் மூலம், உணவுப்பொருட்கள் நீண்டநேரம் பழுதடையாமல் அவற்றின் இயற்கையான தன்மையைப் பாதுகாப்பதற்கும் பெரிதும் உதவுகின்றது.

இத்தயாரிப்பு அறிமுகங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், WiFi வசதியுடனான புதிய Twin Inverter குளிரூட்டியும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த மின்சாரச் செலவில் அதிவேகக் குளிர்ச்சியை வழங்கும் வகையில் இது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் காலநிலைச் சூழலுக்கு ஏற்றவாறு மேம்பட்ட இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் மற்றும் நீடித்து உழைக்கும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இச்சாதனம், வருடம் முழுவதும் வினைத்திறனான மற்றும் நம்பகமான செயல்பாட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிப் பிரிவில், சந்தை ஆய்வு நிறுவனமான ஓம்டியாவின் (Omdia) தரவுகளின்படி, Samsung தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக உலகின் முதலாவது தொலைக்காட்சி உற்பத்தியாளராக உலகளவில் முன்னணியில் இருந்து வருகிறது. இது திரை தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையில் Samsung நிறுவனம் கொண்டுள்ள ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகின்றது. ‘Wowurudu’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் Samsung இன் பரந்த அளவிலான மேம்பட்ட தொலைக்காட்சி தயாரிப்புகளை தொடர்ந்து ஆராய்ந்து தேர்வு செய்யலாம்.

Samsung இன் வீட்டு உபகரண தயாரிப்புகள் எப்போதும் நம்பகத்தன்மை, சிறந்த செயல்திறன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டு வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. உணவுகளை நீண்டகாலம் புத்துணர்வுடன் பேணும் வகையில் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் முதல், நவீன காலத்திற்கு ஏற்ற இலகுவான துணி துவைக்கும் வசதிகளைக் கொண்ட சலவை இயந்திரங்கள் வரை, இலங்கையிலுள்ள அனைத்து அளவிலான குடும்பங்களின் மாறிவரும் தேவைகளைச் Samsung மிகச்சரியாகப் பூர்த்தி செய்து வருகின்றது.

இந்த ‘Wowurudu’ பிரச்சாரமானது சிங்கர், சிங்ககிரி, தம்ரோ மற்றும் சாஃப்ட்லொஜிக் உள்ளிட்ட Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது புத்தாண்டு கால கொள்வனவுகளை மிகவும் இலகுவாகவும் சௌகரியமாகவும் மேற்கொள்ளும் வகையில், நாட்டின் முன்னணி கடன் அட்டை பங்காளர்கள் ஊடாக விசேட தவணைக்கட்டணத் திட்டங்கள் மற்றும் இலகுவான கொடுப்பனவு முறைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை மக்கள் சித்திரை புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், ‘Wowurudu’ பிரச்சாரத்தின் ஊடாக இந்தப் பண்டிகைக் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், Samsung இன் நவீன புத்தாக்கத் தொழில்நுட்பங்கள் மூலம் மேம்பட்ட வாழ்க்கை முறையை அனுபவிக்கவும் Samsung Sri Lanka வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

ව්‍යාපාර අඛණ්ඩතාව සහ මෙහෙයුම්වල ශක්තිමත්...
බයිරහා, ටොන් 500ක අමතර ශීත...
Atlas SipSavi Naththal Poronduwa Records...
First Capital leads Sri Lanka’s...
City of Dreams Sri Lanka,...
Janashakthi Life steps in to...
BYD හි නවතම 3S පහසුකම...
Samsung ශ්‍රී ලංකා ළඟ එන...
Janashakthi Life steps in to...
BYD හි නවතම 3S පහසුකම...
Samsung ශ්‍රී ලංකා ළඟ එන...
ஃபேர்வே ஹோல்டிங்ஸின் (Fairway Holdings) தலைமை...