டிஜிட்டல் யுகத்தில் ஒரு தாயாக, அன்பு, உண்மை மற்றும் இணைய பாதுகாப்புடன் TikTok வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் சந்துனி

Share

Share

Share

Share

தாய்மை என்பது வேறெந்த பயணத்தையும் போலல்லாத ஒரு அனுபவம். வியப்பு, சவால்கள், அன்பு மற்றும் மாற்றங்கள் நிறைந்தது. அண்மைக் காலங்களில், இந்த அனுபவம் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. வெறும் புத்தகங்கள் அல்லது பரம்பரையாக வந்த அறிவால் மட்டுமல்ல, மாறாக உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களுடனான இணைப்பின் வலிமையால், சிலரை நீங்கள் நேரில் பார்க்காமலேயே இருக்கலாம். தங்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை இணையத்தில் பகிரும் இந்தப் பெண்கள், தனிமை உணர்வு மேலோங்கக்கூடிய தருணங்களில் ஆறுதலையும் நட்புணர்வையும் வழங்குகிறார்கள்.

சந்துனி பியரத்ன போன்ற உண்மையான கதை சொல்லிகள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்வது பல தாய்மார்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் வழங்குகிறது. TikTok போன்ற தளங்கள் மூலம், சந்துனி தாய்மையின் இனிமையான, சவால் நிறைந்த, மற்றும் அழகான தருணங்களை அன்புடனும் நேர்மையுடனும் பகிர்ந்து, குழந்தை வளர்ப்பின் மகிழ்ச்சிகளும் போராட்டங்களும் கொண்டாடப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குகிறார்.

ஒரு கையில் தொலைபேசியும், மறுகையில் குழந்தையுமாக ஆரம்பமாகிய பயணம்
சந்துனி தனது படைப்பாளர் பயணத்தை ஒரு கையில் தொலைபேசியும், மறு கையில் குழந்தையுமாக எளிமையாக தொடங்கினார். தாய்மையின் தனிமையை உணர்ந்து, தனது அன்றாட வாழ்வின் சிறு தருணங்களை மற்ற தாய்மார்களுடன் தொடர்பு கொள்வதற்காக பகிர ஆரம்பித்தார். நாளடைவில், இந்த சிறிய முயற்சி ஒரு பெரிய சமூகமாக வளர்ந்து, தாய்மார்கள் உறுதிமொழியும் ஊக்கமும் பெறும் இடமாக மாறியது. சந்துனிக்கு இந்த இணைய சமூகம் வெறும் நினைவுகளை பகிர்வதற்கு அப்பாற்பட்டது. தாய்மையின் அழகையும், சவால்களையும் சம அளவில் புரிந்துகொண்ட பெண்களுடன் உண்மையான உறவுகளை உருவாக்கும் வாய்ப்பாக அமைந்தது.

தாய்மையின் உண்மைநிலையைக் கொண்டாடுதல்
சந்துனியின் கதைசொல்லல் அவரது உண்மைத்தன்மையால் ஈர்க்கப்படுகிறது. அவர் தாய்மையின் அழகான தருணங்களை மட்டுமல்லாமல், வடிகட்டப்படாத யதார்த்தமான நிலைகளையும் பகிர்கிறார். தாய்மை என்பது அனைவருக்கும் கிடைக்காத மிகவும் அரிதான அனுபவம். உண்மையில் அது ஆச்சரியமான அனுபவம். ஆனால் நீங்கள் ஒரு தாயானதால் மட்டும் நீங்கள் யார் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு பெண்ணாக உங்கள் விருப்பு வெறுப்புகள், ஆடை அலங்காரம் போன்றவற்றைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் அழகைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.’ என்று சந்துனி கூறுகிறார்.

சிறு குழந்தையுடன் இருக்கும் சிறப்பான தருணங்கள் மட்டுமல்லாமல், ஒரு தாய் பகலிலும் இரவிலும் குழந்தைக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதைக் காட்டும் வகையில் இரவில் அரவணைத்து தூங்கும் தருணங்களையும் அவரது வீடியோக்களில் சேர்க்க அவர் முயன்றுள்ளார்.

டிஜிட்டல் உலகில் சமநிலை மற்றும் பாதுகாப்புடன் குழந்தைகளை வளர்த்தல்
சந்துனி சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டில் காட்டும் ஆர்வத்தால், குழந்தைகளும் அந்த அனுபவத்தைப் பெறுவதை தவிர்க்க முடியாது. எனினும், அவர் எப்போதும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றி கவனம் செலுத்தி, அவர்களுக்கு அந்தப் பழக்கங்களை உருவாக்க முயற்சிக்கிறார். ‘குழந்தைகள் சமூக ஊடகங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசி;களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால் அவர்கள் அவற்றைப் பயன்படுத்தும்போது அவர்களின் பாதுகாப்பு பற்றிய வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது’ என்று அவர் கூறுகிறார்.

குறிப்பாக குழந்தை கையடக்கத் தொலைபேசியில் செலவிடும் நேரம் குறித்து அதிக கவனம் செலுத்தும் அவர், தாம் சமூக ஊடகங்களில் பகிரும் வீடியோ உள்ளடக்கங்களின் தன்மை பற்றியும் கவனமாக உள்ளார். அதனால்தான் குழந்தைகளுக்கு பொருத்தமான மற்றும் தீங்கற்ற வீடியோ உள்ளடக்கங்களை சமூக ஊடகங்களில் சேர்க்க அவர் முயற்சிக்கிறார். அதேபோல, மற்றவர்கள் மீதான கருணை, நட்பு, மரியாதை போன்ற பண்புகளை வளர்க்கும் வீடியோ உள்ளடக்கங்கள் மூலம் தனது குழந்தைகளுக்கு நல்ல விடயங்கள் பற்றிய செய்தியை வழங்கவும் இதில் முயற்சிக்கிறார்.

டிஜிட்டல் விளையாட்டுகள் மூலம் குடும்ப ஒற்றுமையை பாதுகாத்தல்
குழந்தைகள் தேவையற்ற உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க பயன்படுத்தப்படும் TikTok-இன் Family Pairing அம்சத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் சந்துனி, இது இணைய அனுபவங்களை மேம்படுத்த பாதுகாப்பான மற்றும் நேர்மறையான வாய்ப்பை வழங்குவதாகக் கூறுகிறார். இன்னும் இளம் வயதில் இருக்கும் தனது குழந்தைகள் நாளுக்கு நாள் வளர்ந்து இளம் பருவத்தை அடையும்போது, இந்த அம்சம் அவர்களின் பாதுகாப்பையும், குடும்ப உறவுகளையும் உறுதிப்படுத்தும் என்று சந்துனி நம்புகிறார்.

அவர் இந்த அம்சத்தை முதலில் ஒரு குழந்தை பெரிய விளையாட்டுத் திடலில் போட்டிக்கு வரும்போது கை பிடித்து அழைத்து வரும் ஒருவராகப் பார்க்கிறார். இந்த Family Pairing அம்சம் சமூக ஊடகங்களில் வரம்புகள், குழந்தைகளின் விருப்பங்கள் பற்றிய புரிதல் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் விடயங்கள் குறித்து குடும்பத்தில் உரையாடலை உருவாக்க உதவுகிறது.

இந்த முறையில் பாதுகாப்பாக சமூக ஊடகங்களில் தங்கள் வரம்புகளுக்குள் அனுபவங்களைப் பெறும் குழந்தைகளுக்கு, காலப்போக்கில் அத்தகைய பாதுகாப்பான இடங்களை அணுகவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட வயதிற்கு ஏற்ற பல விடயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, பாதுகாப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம் கிடைக்கிறது.

பாதுகாப்பு மற்றும் உறவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகம்
சந்துனியின் TikTok பயணம் அவருக்கும் மற்ற பல தாய்மார்களுக்கும் மகிழ்ச்சியைச் சேர்க்கிறது. ஒரு தாயாக குழந்தைகளுடன் செலவிடும் உண்மையான வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் வாய்ப்பை TikTok மூலம் பெற்ற அவர், அதன் முன்னணி உள்ளடக்க படைப்பாளராக மாறி, மற்ற தாய்மார்களுக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வரம்புகள் குறித்து கவனம் செலுத்தி, சிறப்பான Family Pairing அம்சத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பை அவர் வழங்கியுள்ளார்.

குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யாமல், கட்டுப்பாட்டுடன் அவற்றின் மூலம் முக்கியமான பல விடயங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்கியுள்ள சந்துனி, Family Pairing அம்சத்தின் மூலம் அவர்களின் வரம்புகளை நன்றாக நிர்வகிக்க முயற்சிக்கிறார். மேலும், பாதுகாப்பான STEM இடங்கள் மூலம் இளம் வயதில் அவர்கள் நல்ல சமூக ஊடக தளங்களை அணுகும் வாய்ப்பையும் அவர் வழங்கியுள்ளார்.

AHRP’s Elevate U continues to...
#BleedGood හරහා ඔසප් දරිද්‍රතාවයට එරෙහිව...
Cyril Rodrigo’s by Green Cabin...
HNB Finance PLC crosses Rs....
Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின்...
Cinnamon Life at City of...
MAS Foundation for Change පිරිසිදු...
අභිමානවත් ශ්‍රී ලාංකේය අනන්‍යතාව සමඟින්...
Cinnamon Life at City of...
MAS Foundation for Change පිරිසිදු...
අභිමානවත් ශ්‍රී ලාංකේය අනන්‍යතාව සමඟින්...
Galaxy Unpacked 2026: The Next...