லத்தீன் கலாசாரத்தின் ஈர்ப்புடன் “Signature Latin Affair”: பெப்ரவரி 13 -15 வரை City of Dreams Sri Lanka இல்

Share

Share

Share

Share

தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ச்சியாக சர்வதேச அனுபவங்களை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படும் City of Dreams Sri Lanka, பெப்ரவரி 13 முதல் 15 ஆம் திகதி வரை மற்றுமொரு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளது. “Signature Latin Affair” ஊடாகக் கவர்ச்சிகரமான லத்தீன் கலாசாரத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம், பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆடம்பரமான இரவு நேர அனுபவத்தை வழங்க City of Dreams Sri Lanka இங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு நகரத்தில் சகல வசதிகளையும் கொண்ட ஹோட்டல் வளாகத்தில் மறக்க முடியாத 3 இரவுகளைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்கி, Signature Latin Affair அனைத்து விருந்தினர்களுக்கும் லத்தீன் இசையுடன் கூடிய உண்மையான ஒரு கொண்டாட்ட (Carnival) அனுபவத்தை இங்கு வழங்குவதற்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் இவ்விழாவில், பெப்ரவரி 09 ஆம் திகதி City of Dreams Melco Club உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட ஒரு விசேட இரவை அனுபவிக்க முடிவதும் இங்கு ஒரு விசேட அம்சமாகும்.

அலங்கரிக்கப்பட்ட மேடையில் அரங்கேறும் கவர்ச்சிகரமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன், Signature Latin Affair நிகழ்விற்கு வருகை தரும் உங்களை வியப்பில் ஆழ்த்தும் பல விசேட காட்சிகளை இங்கு காணலாம். கண்களுக்கும், மனதிற்கும் விருந்தளிக்கும் நேரடி நடனங்கள் மற்றும் சுவையான உணவு பானங்கள் என நீங்கள் இதுவரை அனுபவிக்காத ஒரு மாலைப் பொழுதை இது உங்களுக்குப் பரிசளிக்கும்.

அதுமட்டுமன்றி, கொழும்பு நகரின் அழகுடன் உண்மையான பொழுதுபோக்கின் சுவர்க்கத்தை விருந்தினர்களுக்குக் கொண்டு வந்து, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க City of Dreams இதன் மூலம் தயாராகியுள்ளது.

எதிர்வரும் வார இறுதி நாட்களை காதலர் தினக் கொண்டாட்டமாகவோ அல்லது நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தருணமாகவோ மாற்றிக்கொள்ள விரும்பும் உங்களுக்கு, இந்த மாதத்தில் அதற்கான சிறந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
இதன் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள நீங்கள் அங்கு செல்லவே வேண்டும். இசை மற்றும் நடனத்தை ரசித்து லத்தீன் பாரம்பரியத்தின் உண்மையான அர்த்தத்தை அனுபவிக்க City of Dreams Sri Lanka இன் Signature Latin Affair நிகழ்விற்கு தவறாது வருகை தாருங்கள்.

மேலதிக விபரங்களுக்கு 0112 220 000 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

IASL launches revamped website to...
YOLO by Prime Lands நிர்மாணமானது...
Power World සහ Kings Hospital...
Atlas Makes Learning the Perfect...
මහනුවර සහ කුරුණෑගල නව ශාඛා...
සැම්සුන් හි Hospitality TV නිෂ්පාදන...
Texo සහ Noyon පහසුකම් එක්කර...
HNB 16 වැනි වරටත් ශ්‍රී...
සැම්සුන් හි Hospitality TV නිෂ්පාදන...
Texo සහ Noyon පහසුකම් එක්කර...
HNB 16 වැනි වරටත් ශ්‍රී...
ජස්ලා ඉස්මත් TikTok හි රාමසාන්...