2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள் 

Share

Share

Share

Share

2025ஆம் ஆண்டில் இலங்கையில் TikTok தளத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களை TikTok நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு இலங்கையர்கள் எவற்றில் அதிக ஆர்வம் காட்டினர் என்பதை இத்தரவுகள் பிரதிபலிக்கின்றன. அவர்கள் பின்தொடரும் பிரபலங்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), செவிமடுக்கும் இசை, நாடகத்தொடர்கள், சுற்றுலா செல்ல விரும்பும் இடங்கள் என இந்த ஆண்டு இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தவற்றை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

கிரிக்கெட் ஹைலைட்ஸ் முதல் பொழுதுபோக்கு செய்திகள், கண்டி எசல பெரஹர போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் வரை 2025 தேடல் பட்டியல் பரந்துபட்டதாக உள்ளது. TikTok தேடல் என்பது இன்று வெறுமனே காணொளிகளை பார்க்கும் தளமாக மட்டுமின்றி, அன்றாட முடிவுகளை எடுக்கவும், நிகழ்நேர தகவல்களை அறியவும் பயன்படும் ஒரு தேடல் கருவியாக மாறியுள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது. மக்கள் TikTok-ஐ வெறுமனே காணொளிகளைப் பார்க்க மட்டுமல்லாமல், Trending விடயங்களை அறிய, மறக்கமுடியாத தருணங்களை மீட்டுப்பார்க்க, சுற்றுலா இடங்களை ஆராய, தங்களுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை கண்டறிய என பல்வேறு தேவைகளுக்காக மக்கள் TikTok-ஐ நாடுகின்றனர்.

“இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையில் TikTok தேடல் ஓர் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது” என TikTok நிறுவனத்தின் தெற்காசிய உள்ளடக்க செயல்பாட்டுத் தலைவர் உமைஸ் நவீட் கூறினார். மக்கள் வெறுமனே காணொளிகளை பார்ப்பதுடன் நின்றுவிடாமல், நிகழ்நேரத் தகவல்கள், பரிந்துரைகள் மற்றும் சூழல் விளக்கங்களை தீவிரமாகத் தேடுகின்றனர். விளையாட்டு நிகழ்வுகளை தெரிந்துகொள்ள, வார இறுதி சுற்றுலாவை திட்டமிட, புதியவற்றை கற்றுக்கொள்ள, பொருட்கள் வாங்கும் முன் மதிப்புரைகளை சரிபார்க்க என இலங்கையர்கள் தங்கள் அன்றாட முடிவுகளுக்கு TikTok-நாடுகின்றனர். இந்த ஆண்டின் தேடல் பட்டியல், TikTok எவ்வாறு இலங்கையர்களை அவர்களின் கலாச்சாரம், சமூகம் மற்றும் அன்றாட தேவைகளுடன் இணைக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தேடல்கள் வெளிப்படுத்துவது என்ன?

இந்த ஆண்டின் தேடல்கள் பகிரப்பட்ட தருணங்களையும், அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன. கண்டி, தங்காலை போன்ற இடங்களுக்கான தேடல்கள் பயண உத்வேகத்தில் TikTok-இன் செல்வாக்கை உறுதிப்படுத்துகின்றன. உருவாக்குநர்களின் பரிந்துரைகளும் நேரடி அனுபவங்களும் பயனர்களை புதிய இடங்களை ஆராய தூண்டுகின்றன. அதேவேளை, முக்கிய பொது உரையாடல்கள், சிறப்பு நேர்காணல்கள், பரவலாக பேசப்பட்ட பொப்-கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான தேடல்கள், இலங்கையர்கள் Trends-களை ஒருமித்து அனுபவிப்பதை வெளிப்படுத்துகின்றன. இவற்றை நிகழ்நேரத்தில் பின்தொடர TikTok சமூகங்களுக்கு உதவுகிறது.

விளையாட்டு, கேமிங், இசை, திரையுலகம் என 2025 பட்டியல் கலாச்சாரமும் பயன்பாடும் ஒன்றிணையும் தளமாக TikTok உருவெடுத்திருப்பதை நிரூபிக்கிறது. இங்கு Trend ஆவது பெரும்பாலும் பயனுள்ளதாகவும், நினைவில் நிற்பதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.

2025இல் இலங்கையில் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள் குறிப்பிட்ட வரிசைப்படுத்தப்படாமல் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன;

அதிகம் தேடப்பட்ட showbiz பிரபலங்கள்

சபீனா யூசஃப்

தினித்தி வல்கமகே

யமீஷா ரசாதி

ஷிஹான் மிஹிரங்க

ரஷி பபா

 

அதிகம் தேடப்பட்ட இசைக் கலைஞர்கள்

யொஹானி

சாமர வீரசிங்க

சரித அத்தலகே

மிஹிரான்

ரவீன் தாருக

அதிகம் தேடப்பட்ட TikTok உருவாக்குநர்கள்

டினெல் வல்பொல

தசுனி செனத்மா

லோச்சி

அஷேன் சேனாரத்ன

வைல்ட் குக் புக் (Wild Cookbook)

 

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள்

பெத்தும் நிஸ்ஸங்க

துனித் வெல்லாலகே

தசுன் ஷானக

கிறிஸ்டியானோ ரொனால்டோ

விராட் கோலி

 

அதிகம் தேடப்பட்ட இடங்கள்

கம்பொள

காலி கோட்டை

தங்காலை

கண்டி

மிரிஸ்ஸ

 

அதிகம் தேடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்/ நாடகங்கள்

மோட தரிந்து

ஆயு

பிக் பாஸ்

நீரா

பாட குருல்லோ

அதிகம் தேடப்பட்ட ட்ரெண்ட் / செய்தி / தருணங்கள்

வட்டவல தேயிலை விளம்பரம்

Pissu Kanna’s t-shirt collab with Yureni

Blood Moon

காலி முகத்திடல் காத்தாடி திருவிழா

யேவான் டேவிட் 2025 யூரோ ஃபார்முலா ஓபன் சம்பியன்ஷிப்பில் ரூக்கி கிண்ண வெற்றி

 

குறிப்பிடத்தக்க தேடல்கள்

2025 Sri Lanka World

2025 Creator Search Insights

அநுர குமார திசாநாயக்க

கண்டி எசல பெரஹர

சிரச டான்சிங் ஸ்டார் 2025

அதிகம் தேடப்பட்ட பாடல்கள்/ ஒலிப்பதிவுகள்

சையாரா

சுட்டக் சுட்டக் (யொஹானி பாடல்)

தேவதூதியக் (மிஹிரான் பாடல்)

எஹேம பலுவம மாகே திஹா (யசஸ் மெதகெதர – நீரா திரைப்பட பாடல்)

ஜோடு தாலா யங் (கஜிந்து ஃபொன்சேகா)

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...