2025இல் வலுவான கடன் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட இருப்புநிலை அறிக்கையுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைக்கும் HNB

Share

Share

Share

Share

HNB குழுமம் 2025 ஆம் ஆண்டில் வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் 49.8 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது, இது அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் 45.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. வலுவான இருப்புநிலை விரிவாக்கம் மற்றும் சொத்துத் தரத்தில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றங்கள் இதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்தன.

வங்கியின் நிதிச் செயல்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த HNB PLCஇன் தலைவர் திரு. நிஹால் ஜயவர்தன, “மேம்பட்டு வரும் நுண் பொருளாதார அடிப்படைகள், தனியார் துறையினரின் மீளெழுச்சி பெற்றுள்ள நம்பிக்கை மற்றும் தேசிய மறுசீரமைப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றின் ஆதரவுடன், 2026 ஆம் ஆண்டானது இலங்கையின் பொருளாதாரப் பாதையில் ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறிக்கும் ஆண்டாக அமைந்தது. HNBஇன் வலுவான இருப்புநிலை விரிவாக்கம், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட இடர் முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மற்றும் செயல்பாட்டுத் திறன்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையான முதலீடுகள் என்பன, நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் வங்கி ஒரு முக்கிய பங்கை வகிப்பதற்கு வழிவகுத்துள்ளன.” என தெரிவித்தார்.

“‘தித்வா’ சூறாவளியின் கடுமையான தாக்கத்துடன் இந்த ஆண்டு நிறைவடைந்த போதிலும், சமூகங்களும் நிறுவனங்களும் வெளிப்படுத்திய மீள்தன்மை, சுறுசுறுப்பாகவும் துரிதமாகவும் செயல்படக்கூடிய மற்றும் தேசிய முன்னேற்றத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கக்கூடிய ஒரு வங்கித் துறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. மூலதனத்தைத் திரட்டவும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும் நாம் எமது பங்குதாரர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

வலுவான கடன் வளர்ச்சி இருந்தபோதிலும், தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை காரணமாக நிகர வட்டி வருமான வரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாகின. சந்தை வட்டி விகிதங்களில் ஏற்பட்ட பரந்த வீழ்ச்சி மற்றும் 2024 டிசம்பரில் இலங்கை இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பின் மூலம் கடந்த ஆண்டில் தற்காலிகமாக அதிகரித்த வட்டி வருமானம் ஆகிய காரணிகளால், நிகர வட்டி வருமானம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.6% என்ற சிறிய அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்தது. இருப்பினும், கடன் புத்தகத்தின் விரிவாக்கம் மற்றும் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு (CASA) வைப்புகளின் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் கடன்கள் மற்றும் முற்பணங்களிலிருந்து கிடைத்த வட்டி வருமான அதிகரிப்பானது, நிகர வட்டி வருமானத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உதவியது.

அட்டைப் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, நிகரக் கட்டணம் மற்றும் தரகு வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.9% வளர்ச்சியடைந்தது. இது நிதி சாரா வருமானத்திற்கு ஒரு பலமான உந்துதலை வழங்கியது. வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மேம்பட்டமை ஆகியவற்றால் வர்த்தகம் சார்ந்த சேவைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்தது. இதன் விளைவாக, நடப்பு ஆண்டில் நிதி சாரா வருமானத்திற்குப் பங்களிப்பு வழங்கிய முக்கிய காரணிகளில் ஒன்றாக வர்த்தக நிதி உருவெடுத்தது. மேலும், 2024 ஆம் ஆண்டில் பதிவான 2.9 பில்லியன் ரூபாய் நட்டத்திற்கு மாறாக, இவ்வாண்டில் செலாவணி வருமானம் 6.3 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

HNB PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. தமித் பல்லேவத்த அவர்கள் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்: “2025 ஆம் ஆண்டில் HNB இன் செயல்பாடு, எமது மூலோபாய முன்னுரிமைகளின் வலிமையையும், பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதில் எமது குழுவினரின் தளராத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இவ்வாண்டில் எமது இருப்புநிலை அறிக்கையை மேம்படுத்தவும், டிஜிட்டல் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தவும் மற்றும் செயல்பாட்டு சுறுசுறுப்பை அதிகரிக்கவும் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டோம். இது மேம்பட்டு வரும் சந்தை நிலவரங்களுக்கும், தனியார் துறையினரின் மீளெழுச்சி பெற்றுள்ள நம்பிக்கைக்கும் திறம்பட பதிலளிக்க எமக்கு உதவியது.

எமது டிஜிட்டல் பயணத்தை ‘TradeX’ மற்றும் ‘HNB Accept’ போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் திறன்களுடன் விரைவுபடுத்தியதுடன், HNB மொபைல் பேங்கிங் செயலி (App) மூலம் வங்கிச் சேவைகளை அணுகும் வசதியையும் எளிமையையும் மேலும் மேம்படுத்தினோம். எளிமையான, தடையற்ற மற்றும் உள்ளடக்கிய நிதி தீர்வுகளை வழங்குவதில் எமது கவனத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.” என தெரிவித்தார்.

IASL launches revamped website to...
YOLO by Prime Lands நிர்மாணமானது...
Power World සහ Kings Hospital...
Atlas Makes Learning the Perfect...
මහනුවර සහ කුරුණෑගල නව ශාඛා...
සැම්සුන් හි Hospitality TV නිෂ්පාදන...
Texo සහ Noyon පහසුකම් එක්කර...
HNB 16 වැනි වරටත් ශ්‍රී...
සැම්සුන් හි Hospitality TV නිෂ්පාදන...
Texo සහ Noyon පහසුකම් එක්කර...
HNB 16 වැනි වරටත් ශ්‍රී...
ජස්ලා ඉස්මත් TikTok හි රාමසාන්...