விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z Fold8 கையடக்கத் தொலைபேசிகளுக்கான விற்பனை இலங்கையில் ஆரம்பம்

Samsung Galaxy Z Fold8 Ultra 5G மற்றும் Galaxy Z Fold8 5G ஆகிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய Samsung Sri Lanka நிறுவனம், அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துச் சலுகைகளையும் மேலும் விரிவுபடுத்தியவாறு அத்தொடரை சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பதிவு காலத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் Galaxy Z Fold8 மாதிரி பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, அதிகளவிலான முன்பதிவுகளும் பதிவாகின. இந்த அபரிமிதமான வரவேற்பானது மடிப்பு […]

அடுத்த 3 பில்லியன் டொலர்களை நோக்கி: இலங்கை ஆடைத் தொழிற்துறை அந்த இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும்?

கடந்த முப்பது ஆண்டுகளாக, இலங்கையின் ஆடைத் தொழிற்துறையானது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு அமைதியான முறையில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இது நாட்டின் மொத்த வர்த்தக ஏற்றுமதி வருவாயில் அண்ணளவாக 40 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன், 300,000 முதல் 350,000 வரையான மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. இது 1990களின் ஆரம்ப காலத்திலிருந்து அரசாங்கமும் ஆடைத் தொழிற்துறையும் இணைந்து திட்டமிட்டு மேற்கொண்ட கூட்டு முயற்சிகளின் மூலம் கட்டமைக்கப்பட்டதாகும். 200 ஆடைத் தொழிற்சாலைகள் […]

மீள் எழுச்சியையும் தாண்டி: ஒரு பொது-தனியார் கூட்டு முயற்சி, கைவிடப்பட்ட சர்க்கரை ஆலையை பிராந்தியத்தின் வாழ்வாதாரமாக மாற்றியது எப்படி?

கல்லோயா பிளான்டேஷன்ஸின் கதை என்பது வெறும் ஒரு தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவது பற்றியது மட்டுமல்ல — ஒரு தேசிய சொத்தின் மீதும், மக்களின் எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை வைக்கும்போது, ஒழுங்குமுறையான ஒரு தனியார் நிறுவனத்தின் தொழில்முறைத்திறனால் என்ன செய்ய முடியும் என்பதற்கான சான்றாகும். சுமார் ஒரு தசாப்த காலமாக, அம்பாறையில் உள்ள ஹிங்குரான சீனி தொழிற்சாலை திறமையின் அடையாளமாக நின்றது. 1959இல் அரசு நிறுவனமாகத் ஆரம்பிக்கப்பட்டு, 1991இல் தனியாருக்கு மாற்றப்பட்ட இந்த ஆலை, போதிய முதலீடு இல்லாததால் […]

நைலோன் மறுசுழற்சியை மேம்படுத்த 30 மில்லியன் நிதியைத் திரட்டியது Syntetica

நைலோன் 6 மற்றும் நைலான் 6,6 ஆகிய இரண்டையும் ஒரே செயல்முறையின் மூலம் மறுசுழற்சி செய்யும் தனது பிரத்யேகத் தொழில்நுட்பத்தை Syntetica உருவாக்கியுள்ளது. இது நைலோன் மறுசுழற்சியில் உள்ள பெரிய சவாலுக்குத் தீர்வாக அமைகிறது. சர்வதேச ஆடை நிறுவனமான lululemon மற்றும் உலகின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளர்களுள் ஒன்றான MAS Holdings ஆகிய நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த நிதியுதவி மூலம், ‘மிச்செலின்’ (Michelin) நிறுவனத்துடனான கூட்டாண்மையில் தனது முதலாவது வர்த்தக ரீதியிலான மாதிரி உற்பத்தி மையத்தை […]

First Capital, சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் 2026/27 நிதியாண்டின் முதல் காலாண்டை எதிர்கொள்கிறது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் இலங்கையின் முதலீட்டு வங்கிச் சந்தையில் முன்னணி நிறுவனமுமான First Capital Holdings PLC, அதிகரித்த உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் வட்டி வீதங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு மத்தியில், 2026/27 நிதியாண்டின் சவாலான முதல் காலாண்டைக் கடந்து வந்தது. சந்தை நிலவரங்கள், நிலையான வருமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தபோதிலும், குழுமத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகப் பிரிவுகளான நிறுவன நிதி ஆலோசனை மற்றும் நிறுவனப் […]

முற்பணங்களில் 224 பில்லியன் ரூபா அதிகரிப்புடன் முதல் அரையாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்த HNB

பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலப்பகுதியை எதிர்கொண்டு, HNB குழுமம் 2026 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதிக்கான வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) 22.5 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்துள்ளதுடன், இதே காலப்பகுதியில் வங்கி மாத்திரம் 23.1 பில்லியன் ரூபாய் வரியின் பின்னரான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இவ்வருடத்தின் முதலாம் அரையாண்டில் முற்பணங்கள் 224 பில்லியன் ரூபாயினாலும், வைப்புகள் 138 பில்லியன் ரூபாயினாலும் அதிகரித்ததன் மூலம் இந்தச் செயல் […]

2026 இன் இலங்கையின் மிக மதிப்புமிக்க வர்த்தக நாமங்கள் தரவரிசையில் HNB மீண்டும் சாதனை

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அண்மைய Brand Finance Sri Lanka 100 அறிக்கையின்படி 25.4 பில்லியன் ரூபா வர்த்தக நாம மதிப்புடன், நாட்டின் மிக மதிப்புமிக்க வர்த்தக நாமங்களின் வரிசையில் மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் மிக மதிப்புமிக்க வர்த்தக நாமங்கள் 10இல் ஆறு வங்கிகள் இடம்பெற்றுள்ளதன் மூலம், வங்கித் துறையின் ஆதிக்கம் நிறைந்த முதல் 10 தர வரிசைக்குள் HNB இடம் பிடித்துள்ளது. இந்தத் துறையானது இந்த ஆண்டின் […]

வார இறுதி விடுமுறையை மறக்கமுடியாத நினைவுகளாக மாற்ற TikTok வழங்கும் புதிய வழிகாட்டுதல்கள்

நீண்ட வாரயிறுதி விடுமுறைகள் என்பது நண்பர்களுடன் இணைந்து வழக்கமான தேனீர் சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டு, சுவாரஸ்யமான மற்றும் புதுமையான அனுபவங்களைப் பகிர்வதற்குக் கிடைக்கும் மிகச்சிறந்த வாய்ப்பாகும். புதிய இடங்களை ஆராய்வது, சமூக ஊடகங்களில் பிரபலமாகும் Trending சமையல் குறிப்புகளை முயற்சிப்பது, கைவினைப் பொருட்களை உருவாக்குவது அல்லது நண்பர்களுடன் இணைந்து வீட்டை விட்டு வெளியேறி பொழுதைக் கழிப்பது என அனைத்து வகையான திட்டங்களுக்கும் உத்வேகம் அளிக்கும் தளமாக TikTok உருவெடுத்துள்ளது. உலகளாவிய ரீதியில் ட்ரெண்டாகும் யோசனைகள் முதல், இலங்கையின் உள்ளூர் […]

Huawei மற்றும் HP Inc. இடையே உலகளாவிய காப்புரிமை பகிர்வு ஒப்பந்தம்

தொலைத்தொடர்புத் துறையின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Huawei மற்றும் உலகின் முன்னணி கணினி உற்பத்தி நிறுவனமான HP Inc. ஆகியன அண்மையில் உலகளாவிய காப்புரிமை பகிர்வு (Patent Cross-Licensing) ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நிறுவனங்களும் தங்களுக்குச் சொந்தமான தொழில்நுட்பக் காப்புரிமைகளை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், Huawei நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்தியேக Wi-Fi தொழில்நுட்பக் காப்புரிமைகளை HP Inc. நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை […]

2026 ஆசிய விளையாட்டு விழா: இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS

ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் விழாவில் பங்கேற்கும் இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு ஆடைகளை, அதன் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளரான ‘எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ்’ (MAS Holdings) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 20ஆவது ஆசிய விளையாட்டு விழா இம்மாதம் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 4 ஆம் திகதி வரை ஜப்பானின் அய்ச்சி மாகாணம் மற்றும் நகோயா நகரங்களில் நடைபெறவுள்ளன. அந்த வகையில், தேசிய ஒலிம்பிக் […]