EFC National Best Employer Awards நிகழ்வில் ஆண்டின் சிறந்த 10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக HNB அங்கீகரிப்பு

Share

Share

Share

Share

முதலாவது EFC National Best Employer Awards விருது வழங்கும் நிகழ்வில், 2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக HNB PLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவமானது, சிறந்த தொழில் வழங்குநர்களுக்கான ஒரு நம்பகமான தேசிய அளவுகோலாகக் கருதப்படுகிறது. இது நிறுவனங்களின் நிர்வாகம், தலைமைத்துவம், பணியாளர் நடைமுறைகள், பணியாளர் நலன், கற்றல், செயல்திறன் நிர்வகிப்பு மற்றும் பணியிட கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து வழங்கப்படுகிறது.

இந்த அங்கீகாரமானது, HNBஇன் மனித மூலதன மூலோபாயத்தின் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு பாரம்பரிய மனிதவள அணுகுமுறையிலிருந்து, ஊழியர்களை நிறுவனத்தின் முதன்மையான சொத்தாகக் கருதும் ஒரு கட்டமைக்கப்பட்ட மாதிரிக்கு மாற்றமடைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், வங்கி தனது பணியிடப் பொறுப்புகளில் தெளிவு, பொறுப்புக்கூறல் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைச் செயல்படுத்தியுள்ளது. அதேவேளை, ஒட்டுமொத்தப் பணியாளர் அனுபவத்தையும் இது வலுப்படுத்தியுள்ளது.

இது குறித்து HNBஇன் சிரேஷ்ட பிரதித் தலைவரும் தலைமை மனிதவள அதிகாரியுமான கே. இந்திரவாசன் கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய அளவில் சிறந்த 10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டிருப்பது, நாம் ஒவ்வொரு நாளும் முன்னெடுத்து வரும் பணிகளுக்குக் கிடைத்த ஒரு அர்த்தமுள்ள சான்றாகும். இது எமது நிர்வாகம் மற்றும் பணியாளர் நடைமுறைகளுக்காக நாம் வகுத்துள்ள தரநிலைகளை வெளிப்படுத்துவதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால திறமையாளர்களுக்கு, HNB என்பது அவர்களின் பங்களிப்பு மதிக்கப்படும் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கப்படும் ஒரு தளம் என்பதையும் பறைசாற்றுகிறது. இந்த அங்கீகாரம், எமது பணியிட கலாச்சாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தவும், ஒவ்வொரு ஊழியரும் வெற்றி பெறுவதற்குத் தேவையான கருவிகளையும் ஆதரவையும் கொண்டிருப்பதை உறுதி செய்யவும் எமக்கு ஊக்கமளிக்கிறது. மேலும், திறமைகளை வளர்த்து, நிறுவனத்தின் மீதான அவற்றின் தாக்கத்திற்காக அந்த திறமைகளை அங்கீகரிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பையும் இது பலப்படுத்துகிறது,” என தெரிவித்தார்.

HNB வெளிநாட்டு ஆலோசனையாளர்களுடன் இணைந்து ஒரு மூலோபாய மனித மூலதன மாற்றத் திட்டத்தை முன்னெடுத்தது. இதன் மூலம் நிறுவனக் கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்பட்டதுடன், உத்தியோகப்பூர்வ தரநிலைகள் மற்றும் நிலைகள் சீரமைக்கப்பட்டு, ஊதியம் மற்றும் நன்மைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த முயற்சியானது, வங்கியின் அனைத்துப் பிரிவுகளிலும் ஒரு சீரான சூழலை உருவாக்கவும், பணி எதிர்பார்ப்புகள் மற்றும் வெகுமதிகளில் நியாயத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யவும் முயன்றது. மேலும், வங்கி தனது செயல்திறன் சார்ந்த கலாச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், செயல்திறன் அடிப்படையிலான அளவுகோல்களின் கீழ் வரும் ஊழியர்களின் விகிதம், நிர்வகிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட தரநிலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 18 சதவீதத்திலிருந்து, நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி தரநிலைகளையும் உள்ளடக்கி 41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

“கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், எங்களது ‘மக்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை அன்றாட நடைமுறையாக மாற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். எமது ஊழியர்கள் நம்பிக்கையுடன் பணியாற்றுவதற்கும், அவர்களது தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் ஏற்ற தெளிவான கட்டமைப்புகள், நடைமுறை ஆதரவு அமைப்புகள் மற்றும் கற்றல் வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். வங்கியின் அனைத்து மட்டங்களிலும் இந்த நடைமுறைகளை நாங்கள் சீராகப் பின்பற்றுவதே எற்பட்டுள்ள முக்கிய மாற்றமாகும். இதன் மூலம் ஒவ்வொரு தனிநபரும் தாம் மதிக்கப்படுவதையும், ஆதரவளிக்கப்படுவதையும், ‘HATNA’ குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதையும் உணருவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என HNBஇன் மனித மூலதன மூலோபாயத்திற்கான துணைத் தலைவர் ரொஷாந்த ஜயதுங்க குறிப்பிட்டார்.

பணியாளர் நலன் என்பது HNBஇன் மனித மூலதன மூலோபாயத்தின் ஒரு முக்கிய தூணாகும். வங்கி தனது கிளை வலையமைப்பு முழுவதும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக, HNB நலன்புரி மையம் மற்றும் நடமாடும் மருத்துவ சேவையை இயக்கி வருகிறது. இதனுடன் கூடுதலாக மன அழுத்த முகாமைத்துவ திட்டங்கள், உணர்ச்சிசார் நுண்ணறிவு மேம்பாடு, பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம்கள் மற்றும் ஓய்வூதியக் காலத்திற்கான ஆயத்தத் திட்டங்கள் ஆகியவையும் செயல்படுத்தப்படுகின்றன. HNB தனது ஊழியர்களுக்குத் துறையில் முன்னணியில் உள்ள காப்புறுதி வசதிகளை வழங்குவதுடன், அதே நன்மைகளை அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சிகள் உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான ஆரோக்கியத்தைச் சமநிலைப்படுத்தும் ஒரு முழுமையான நலன்புரி கட்டமைப்பிற்கு ஆதரவளிக்கின்றன.

கற்றல் மற்றும் மேம்பாடு ஆகியவை HNBஇன் அணுகுமுறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஊழியர்கள் உதவியாளர் நிலைகளில் இருந்து முகாமையாளர் நிலைகளுக்கு முன்னேறுவதற்கு உதவும் வகையில், கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களையும் தொழில் வளர்ச்சிப் பாதைகளையும் வங்கி வழங்குகிறது. கட்டமைக்கப்பட்ட அங்கீகார முயற்சிகள், உள்வாரியான போட்டிகள், வாடிக்கையாளர் அனுபவம், விற்பனை மற்றும் கற்றல் சாதனைகளுக்கான விருதுகள், அத்துடன் சிறந்த பேச்சாளர் போட்டிகள் மற்றும் குழு வினா விடை போட்டிகள் போன்ற செயல்பாடுகளின் மூலம் ஊழியர்களின் ஈடுபாடு வலுப்படுத்தப்படுகிறது.

HNB 2026 ජාත්‍යන්තර කාන්තා දිනයට...
Power World joins hands with...
Janashakthi Finance Wins Bronze Effie...
ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்:...
චීන සංස්කෘතියේ අභිමානය පෙරටු කොට...
T20 உலகக் கிண்ணத்தில் பிளாஸ்டிக் மீள்சுழற்சியை...
Ramadan in the Digital Age:...
தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக்...
T20 உலகக் கிண்ணத்தில் பிளாஸ்டிக் மீள்சுழற்சியை...
Ramadan in the Digital Age:...
தெற்காசியாவில் முதன்முறையாக BYD-இன் ஏழு ஆசனங்களைக்...
Huawei Unveils Three Key Values...